Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaShreyas IyerT20I

சரிவிலிருந்து மீட்ட ஸ்ரேயாஸ் ஐயர் : இங்கிலாந்து சிறப்பான பந்துவீச்சு

Shreyas Iyer : Cricket news in Tamil

Shreyas Iyer Half Century : ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

சரிவிலிருந்து மீட்ட ஸ்ரேயாஸ் ஐயர் : இங்கிலாந்து சிறப்பான பந்துவீச்சு

இங்கிலாந்து அணி கடந்த மாதம் முதல் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற விதத்தில் அபாரமாக வென்றது.

இங்கிலாந்து டாஸ் வென்றது

இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் இன்று அஹமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டாவது இன்னிங்சின் போது பனி பொழிவிற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது.

இதனால் டாஸ் வெல்லும் அணி பௌலிங் தெரிவு செய்யும் என்ற நிலை இருந்தது. அதே போல டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கையே தெரிவு செய்தார்.

மோசமான தொடக்கம்

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர் ஷிகார் தவான் மற்றும் KL ராகுல். ஆர்ச்சர் தனது முதல் ஒவரிலேயே
KL ராகுலின் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி அதில் ரஷிதின் முதல் ஒவரில் மிட் ஆப் திசையில் தூக்கி அடித்து கிறிஸ் ஜோர்டானிடம் கேட்ச் கொடுத்து ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

India-vs-England : Cricket news in Tamil

இங்கிலாந்து பௌலர் மார்க் வுட் தனது முதல் ஓவராக 5 ஓவரை வீசினார், ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த ஷிகார் தவான் மார்க் வுட்டின் அதிவேக பந்து வீச்சில் போல்ட் ஆனார்

பவர் பிளேவின் (6ஓவர்கள்) முடிவில் இந்தியா 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

ரிஷப் பண்ட் & ஸ்ரேயாஸ் கூட்டணி

அதன் பிறகு இணைந்த ஷ்ரேயஸ் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணி சிறிது நேரம் மட்டுமே நிலைத்து விளையாடியது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தில் தொடர்ச்சியாக சிக்ஸர், பௌண்டரி என்று வெளுத்து வாங்கினாலும், ரிஷப் பண்ட் 21 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் பந்தை தூக்கியடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் & ஹார்டிக் கூட்டணி
Hardik Pandya : Cricket news in Tamil

அதன் பிறகு இணைந்த ஷ்ரேயஸ் மற்றும் ஹார்டிக் பாண்டியா கூட்டணி நிதானமான வேகத்தில் ஆடி 48/4 என்று மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.

இந்த கூட்டணி 54 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஹர்டிக் பாண்டியா ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தில் அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான அரைசதம்

எல்லோரும் சொதப்பினாலும் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாகவும் நிதானமாகவும் ஆடி 36 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு மதிப்பான ஸ்கோரை அடைய உதவினார்.

Shreyas Iyer : Cricket news in Tamil

அதன் பிறகு ஷ்ரேயாஸ் 48 பந்துகளில் 67 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்தியா 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Shreyas Iyer Half Century : ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம்

இந்தியா vs இங்கிலாந்து : இந்தியா இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணை
ரன்கள்பந்துகள்பௌண்டரிசிக்ஸர்
ஷிகார் தவான் b வுட்41200
K.L. ராகுல்b ஆர்ச்சர்1400
விராட் கோலிC ஜோர்டான் b ரஷீத்0500
ரிஷப் பண்ட்C பேர்ஸ்டோ b ஸ்டோக்ஸ்212321
ஷ்ரேயஸ் ஐயர்C மலான் b ஜோர்டான்674881
ஹார்டிக் பாண்டியாC ஜோர்டான் b ஆர்ச்சர்192111
ஷார்துல் தாகூர்C மலான் b ஆர்ச்சர்0100
வாஷிங்டன் சுந்தர்Not Out3300
அக்சார் படேல்Not Out7310
ஓவர்மெய்டன்ரன்கள்விக்கெட்
அதில் ரஷீத்30141
ஜோஃப்ரா ஆர்ச்சர்41233
மார்க் வுட்40201
கிறிஸ் ஜோர்டான்40271
பென் ஸ்டோக்ஸ்30251
சாம் கரன்20150

மேலும் செய்திகளுக்கு

முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page

Comment here

error: Content is protected !!