Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

Rishab PantTestVideos

ரிஷப் பண்ட்டின் சிறப்பான சம்பவம் : உணர்ச்சிவசப்பட்டு விக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்

Rishab Pant : Cricket News in Tamil

ரிஷப் பண்டின் சிறப்பான சம்பவம் : Rishab Pant sledges Zack Carwley

ரிஷப் பண்ட்டின் சிறப்பான சம்பவம் : உணர்ச்சிவசப்பட்டு விக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி இன்று அஹமதாபாத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தெரிவு செய்தார்.

இங்கிலாந்து அணி முதல் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலையிலே இந்தியாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமத் சிராஜ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், டேன் லாரன்ஸ் 46 ரன்களையும் எடுத்திருந்தனர்.

ரிஷப் பண்டின் ஸ்லெட்ஜிங்

Rishab Pant sledges Zack Carwley

ரிஷப் பந்த் எப்போதுமே தன்னுடைய கலாய்க்கும் கிண்டல் பேச்சுக்களால் எதிராணியினரை வெறுப்பேற்றுவதிலும் இந்திய அணியினரை உற்சகப்படுத்துவதிலும் கில்லியாக செயல்படுவார்.

இவரது இந்த செயல் பெரும்பாலும் அணைத்து ரசிகர்களாலும் விரும்பப்படும். அதே போல் சிறப்பான சம்பவம் ஒன்றை இன்று இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் செய்தார் ரிஷப் பண்ட்.

கடுப்பான சாக் க்ராலி

ரிஷப் பண்டின் சிறப்பான சம்பவம் : Rishab Pant sledges Zack Carwley

மேலும் இன்று ரிஷப் பண்ட், 8ஆவது ஒவரின் போது அக்சர் பட்டேல் பந்து வீசும் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனை ஜாலியாக கலாய்த்தார்.

மேலே உள்ள வீடியோவில் “Someone is getting angry, Someone is getting angry” என்று ஸ்டம்புக்கு பின் நின்று பேட்ஸ்மேனை வெறுப்பேற்றும் வகையில் பேசிக்கொண்டே இருந்தபோது கோபத்தில் உணர்ச்சிவசப்பட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாக் க்ராலி மிட் ஆப் திசையில் பந்தை தூக்கியடித்து சிராஜ் கையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

மேலும் செய்திகளுக்கு

முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page

Rishab Pant sledges Zack Carwley : ரிஷப் பண்டின் சிறப்பான சம்பவம்

Comment here

error: Content is protected !!