Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaRishab PantTest

ரிஷப் பண்டின் தரமான செய்கை : மீண்டும் ஒரு அதிரடி சதம்

Rishab Pant : Cricket news in Tamil

ரிஷப் பண்ட் : Rishab Pant

ரிஷப் பண்டின் தரமான செய்கை : மீண்டும் ஒரு அதிரடி சதம்

நேற்று மார்ச் 4, அஹமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தெரிவு செய்தார்.

முதல் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலையிலே இந்தியாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், டேன் லாரன்ஸ் 46 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமத் சிராஜ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய இன்னிங்ஸ் : சொதப்பலான தொடக்கம்

தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில், நேற்று முதல் ஒவரிலேயே ஆண்டர்சன் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாராவும் 17 ரன்களிள் லீச் பந்தில் Lbw முறையில் ஆட்டமிழந்தார்.

Ben Stokes - James Anderson - Cricket News in Tamil

கேப்டன் கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெண் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு வந்த அஜிங்க்யா ரஹானே மற்றொரு புறம் வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக பார்ட்னெர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அணியின் ஸ்கோர் 80 ஆக இருக்கும்போது ஆண்டர்சன் பக்காவாக பிளான் செய்து ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ரோஹித் சர்மா – ரிஷப் பண்ட் கூட்டணி

Rohit Sharma - Rishab Pant - Cricket News in Tamil

ஒருபுறம் நிலைத்து ஆடிகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவும் ரிஷப் பண்டும் நிதானமாக விளையாடினர். ரோஹித் சர்மா துரதிர்ஷ்ட வசமாக 49 ரன்கள் இருக்கும்போது ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு வந்த அஸ்வினும் 13 ரன்களிள் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். 146 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது இந்தியா அணி.

ரிஷப் பண்ட் – வாஷிங்டன் சுந்தர் கூட்டணி

இப்போதுதான் இந்தியாவின் உண்மையான ஆட்டம் ஆரம்பமாகியது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இந்திய அணி எட்டுமா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கூட்டணி அமைத்தனர்.

ஒருபுறம் வாஷிங்டன் நிலைத்து ஆட ரிஷப் பண்ட் 82 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நல்ல வேகமான அரைசதமாக இருந்தாலும் பண்ட் செட் செய்து வைத்திருக்கும் ஸ்டேண்டர்டுக்கு இது மிகவும் நிதானமான ஆட்டமாகும்.

பண்டின் தரமான செய்கை : மீண்டும் ஒரு அதிரடி சதம்

அரைசதத்திற்கு பிறகு அதிரடியை ஆரம்பித்த பண்ட் ஒவ்வொரு ஒவரிலும் குறைந்து ஒரு பௌண்டரி என விரைவாக ரன்களை உயர்த்தினார். 80 ஒவர்கள் முடிந்த பிறகு புதிய பந்தை எடுத்தது இங்கிலாந்து அணி.

புதிய பந்தில் ஆண்டர்சனின் பந்தை பாரபட்சமின்றி ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பிஹைண்ட் தி விக்கெட் பறக்கவிட்டபோது ஆண்டர்சன் திகைத்துவிட்டார்.

Rishab Pant : Cricket News in Tamil

94 ரன்களுக்கு பண்ட் வந்தபோது, வழக்கம்போல் 90 ரன்கள் இருக்கும்போது அவுட் ஆவது போல் இம்முறையும் அவுட் ஆகக் கூடாது அன்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் மிட் ஆன் திசையில் பீல்டர் இருந்தபோதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தூக்கி அடிக்க அது சிக்ஸர் ஆகா மாறியது.

இந்த சிக்ஸின் மூலம் சொந்த நாட்டில் தனது முதல் சதத்தையும், டெஸ்ட் போட்டிகளில் 3 ஆவது சதத்தையும் அடித்தார் பண்ட்.

115 பந்துகளில் 100 தனது சதத்தை பூர்த்தி செய்தார் பண்ட். இதில் 13 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இரண்டாவது 50 ரன்களை 33 பந்துகளில் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை பெய்து ஓய்ந்தது போல சதமடித்த பின்னரும் அதிரடியாக ஆட முயன்ற பண்ட், ஆண்டர்சன் பந்தில் 101 ரன்கள் இடித்திருந்தபோது ஆட்டமிழந்தார்

வாஷிங்டன் சுந்தர் அரை சதம்
Indian team : Cricket News in Tamil

பந்த் ஆட்டமிழந்தும் தனது நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த வாஷிங்டன் சுந்தர், டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய மூன்றாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா 294 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்சார் படேல் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தியா முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு

முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page

Comment here

error: Content is protected !!