Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

South Africa

குயின்டன் டீ காக் தென்னாப்பிரிக்க கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

South Africa : Cricket News in Tamil

குயின்டன் டீ காக் : Quinton de Kock

தென்னாப்பிரிக்க கேப்டன் பதவியிலிருந்து குயின்டன் டீ காக் நீக்கம்

குயின்டன் டீ காக்கின் பதவிக்காலம் முடிந்ததால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (CSA) இன்று புதிய கேப்டன்களாக டீன் எல்கர்-ஐ டெஸ்ட் அணிக்கும் டெம்பா பாவுமாவை ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கும் கேப்டன்களாக நியமித்தது.

டெம்பா பாவுமா 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடக்கும் T20 உலகக்கோப்பை போட்டிகளையும், 2023 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிகளையும் கேப்டனாக இருந்து வழிநடத்துவார்.

டீன் எல்கர் அடுத்து நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வழிநடத்துவார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் குயின்டன் டீ காக்கிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளது

குயின்டன் டீ காக் : Quinton de Kock

“தென்னாபிரிக்க கிரிக்கெட் குயின்டன் டீ காக்கிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அவரின் சாதனை மகத்தானது, அதேபோல் அணி டெஸ்ட் கேப்டன் இன்றி தடுமாறிய போதும் அவர் பொறுப்பெடுத்து டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியது சிறப்பான செயலாகும்.”

“அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் தலைமைக்கு குழுவின் அங்கமாகவே எப்போதும் இருப்பார் என்று நம்புகிறேன்.”புதிய கேப்டன்களான டீன் எல்கர் மற்றும் டெம்பா பாவுமா இருவரும் தென்னாப்பிரிக்க அணியை முன்பு இருந்ததுபோல் வெற்றி பாதைக்குள் வழிநடத்துவார்கள் என்று நம்புகிறோம்”

என்று தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இயக்குனருமான கிரீம் ஸ்மித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு தலைமையேற்பது நீண்ட நாள் கனவு

Temba Bavuma : Cricket News in Tamil

“தென்னாபிரிக்க அணிக்கு தலைமையேற்பது எனது நீண்ட நாள் கனவு இதை எனக்கு நெருக்கமானவர்கள் நன்கு அறிவார்கள். என் வாழ்க்கையில் இதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்.”

“குயின்டன் டீ காக் விட்ட இடத்திலிருந்து இதை முற்றிலும் புதிய பரிணாமத்தில் தொடர மிகவும் ஆவலாக உள்ளேன்” என்று தென்னாபிரிக்க அணியின் புதிய கேப்டன் டெம்பா பாவுமாதனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு

முகநூல் பக்கத்தை பின்தொடர : Follow our Facebook Page

ரிஷப் பண்ட்டின் சிறப்பான சம்பவம் : உணர்ச்சிவசப்பட்டு விக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்

Comment here

error: Content is protected !!