Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaTest

இந்தியா vs இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து டாஸ் வென்றது

India-Vs-England-Cricket-News-in-Tamil
இந்தியா vs இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து டாஸ் வென்றது

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டி அஹமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது, இப்போட்டியில் இந்தியா அபாரமாக இங்கிலாந்தை 2 நாட்களில் சுழல்பந்தால் சுருட்டி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இந்திய அணி 2-1 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அல்லது போட்டி ட்ராவில் முடிவடைந்தால் மட்டுமே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

இங்கிலாந்து : டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டி இன்று மார்ச் 4 அஹமதாபாத்தில் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது.

டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். இரண்டு அணிகளும் 3 ஆவது போட்டியிலிருந்து அணியில் சில மாற்றங்களை செய்தனர்.

இரு அணிகளின் மாற்றம்

இங்கிலாந்து அணி ஸ்டுவர்ட் ப்ராட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக டோம் பெஸ் மற்றும் டேன் லாரன்ஸை அணியில் இணைத்தது .

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த போட்டியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக முகமத் சிராஜ் அணியில் இணைந்தார்.

இந்திய அணியின் ஆடும் 11 வீரர்கள்
India-vs-England-4thTest-India-Playing-XI

1.ரோஹித் சர்மா
2.சுப்மன் கில்
3.செடேஸ்வர் புஜாரா
4.விராட் கோலி
5.அஜிங்க்யா ரஹானே
6.ரிஷப் பண்ட்
7.வாஷிங்டன் சுந்தர்
8.ரவிச்சந்திரன் அஸ்வின்
9.அக்சார் படேல்
10.முகமத் சிராஜ்
11.இஷாந்த் சர்மா

இங்கிலாந்து அணியின் ஆடும் 11 வீரர்கள்
India-vs-England-4thTest-England-Playing-XI
India-vs-England-4thTest-England-Playing-XI

1.சாக் க்ராலி
2.டோம் சிப்லி
3.ஜானி பேர்ஸ்டோ
4.ஜோ ரூட்
5.பென் ஸ்டோக்ஸ்
6.ஒல்லி போப்
7.டேன் லாரன்ஸ்*
8.பென் போக்ஸ்
9.டோம் பெஸ்*
10.ஜாக் லீச்
11.ஜேம்ஸ் ஆண்டர்சன்

Comment here

error: Content is protected !!