Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaR AshwinRecordsTest

சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்களைக் கடந்தார் அஸ்வின்

Ravichandran Ashwin - Cricket updates and Cricket news in Tamil
சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்களைக் கடந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் : Ravichandran Ashwin

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 24 அஹமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் தொடங்குவதற்கு முன் சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ODI, T20I) அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து 596 விக்கெட்களை எடுத்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்களை எடுத்ததன் மூலம் 599 விக்கெட்டுகளுடன் இருந்தார்.

இன்று இரண்டாவது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை சர்வதேச போட்டிகளின் 600 ஆவது விக்கெட்டாக எடுத்தார்.

அஸ்வின் : மைல்ஸ்டோன் விக்கெட்கள்
  • 100ஆவது விக்கெட் – கிறிஸ் மார்ட்டின்
  • 200ஆவது விக்கெட் – டினோ பெஸ்ட்
  • 300ஆவது விக்கெட் – ரங்கான ஹெராத்
  • 400ஆவது விக்கெட் – ராஸ் டெய்லர்
  • 500ஆவது விக்கெட் – தில்ருவன் பெரேரா
  • 600ஆவது விக்கெட் – பென் ஸ்டோக்ஸ் *
சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்கள் (அஸ்வின் Debut ஆனதிலிருந்து)
  • அஸ்வின் – 600
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் – 554
  • ஸ்டுவர்ட் பிராட் – 547
  • டிம் சௌதீ – 503
  • ட்ரெண்ட் போல்ட் – 486

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணையைப் பார்க்க

முகநூலில் பின்தொடர

Comment here

error: Content is protected !!