இந்தியா vs இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் போட்டி -India vs England
India vs England : அஹமதாபாத் பகலிரவு டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 24 அஹமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது
இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, இறுதியில் 48.4 ஒவரில் 112 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ஹிட்மேன் ரோஹித் சர்மா அதிக பட்சமாக 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியாவின் மோசமான தொடக்கம்
இன்று 99 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கியது இந்திய அணி. சிறிது நேரம் நிலைத்து ஆடிய இந்திய அணி இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 112ஐ விட முன்னிலை வகித்த நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்த போது அஜிங்க்ய ரஹானே ஜாக் லீச்சின் பந்து வீச்சில் LBW ஆனார்.

அதன் பிறகு ரோஹித் ஷர்மாவும் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானேவைப் போலவே ஜாக் லீச்சின் பந்து வீச்சில் LBW ஆனார்.
இந்தியா vs இங்கிலாந்து 3ஆவது பகலிரவு பிங்க் பால் டெஸ்ட் போட்டி (India vs England)
ஜோ ரூட்டின் அபார பந்துவீச்சு

ஜாக் லீச்சைத் தவிர வேறு சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டே பகுதி நேர பந்துவீச்சாளராக பந்து வீச வந்தார்.
ஜோ ரூட் வீசிய முதல் ஒவரின் முதல் பந்திலேயே இந்தியாவின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் லூஸ் ஷாட் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகும் ஜோ ரூட் தனது எளிமையான சுழற்பந்தில் இந்தியாவின் ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேலின் விக்கெட்களை வீழ்த்தினார்.
ஜோ ரூட்டின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது இந்தியா
99/3 என்ற நல்ல நிலையில் ஆட்டத்தைத் தொடங்கினாலும் ஜாக் லீச் மற்றும் ஜோ ரூட்டின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா.

அஸ்வின் மட்டும் சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக கணித்து ஆடிய நிலையில் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பில் ஜோ ரூட்டின் பந்தில் டீப் ஸ்கொயர் திசையில் தூக்கி அடித்து க்ராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்
இறுதியாக பூம்ராவின் விக்கெட்டையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட் ஹாலை எடுத்தார் ஜோ ரூட். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் மிகச்சிறந்த பந்துவீச்சாகும்.
இந்தியா vs இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணை
ரன்கள் | பந்துகள் | பௌண்டரி | சிக்ஸர் | ||
ரோஹித் சர்மா | LBW b லீச் | 66 | 96 | 11 | 0 |
சுப்மன் கில் | C க்ராலி B ஆர்ச்சர் | 11 | 51 | 2 | 0 |
செடேஸ்வர் புஜாரா | LBW b லீச் | 0 | 4 | 0 | 0 |
விராட் கோலி | b லீச் | 27 | 58 | 3 | 0 |
அஜிங்க்யா ரஹானே | LBW b லீச் | 7 | 25 | 1 | 0 |
ரிஷப் பண்ட் | C போக்ஸ் b ரூட் | 1 | 8 | 0 | 0 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | C க்ராலி b ரூட் | 17 | 32 | 3 | 0 |
வாஷிங்டன் சுந்தர் | b ரூட் | 0 | 12 | 0 | 0 |
அக்சார் படேல் | C சிப்லி b ரூட் | 0 | 2 | 0 | 0 |
இஷாந்த் சர்மா | Not Out | 10 | 20 | 0 | 0 |
ஜஸ்பிரிட் பும்ரா | LBW b ரூட் | 1 | 12 | 0 | 0 |
ஓவர் | மெய்டன் | ரன்கள் | விக்கெட் | |
ஜேம்ஸ் ஆண்டர்சன் | 13 | 8 | 20 | 0 |
ஸ்டுவர்ட் ப்ராட் | 6 | 1 | 16 | 0 |
ஜோஃப்ரா ஆர்ச்சர் | 5 | 2 | 24 | 1 |
ஜாக் லீச் | 20 | 2 | 54 | 4 |
பென் ஸ்டோக்ஸ் | 3 | 0 | 19 | 0 |
ஜோ ரூட் | 6.2 | 3 | 8 | 5 |
Comment here