Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaTest

இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட் : ஆட்ட நாயகன் அக்சார் படேல்

Axar Patel Cricket News in Tamil

India vs England Test Match – 3rd Test Day 2 : இந்தியா vs இங்கிலாந்து

இந்தியா vs இங்கிலாந்து : அஹமதாபாத் பகலிரவு டெஸ்ட்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று. தலா 1 வெற்றிகளுடன் 1-1 என்ற சம நிலையில் இருந்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 24 அஹமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது.

டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். இரண்டு அணிகளும் 2 ஆம் போட்டியிலிருந்து அணியில் சில மாற்றங்களை செய்தனர்.

India vs England Test Match – 3rd Test Day 2 : இந்தியா vs இங்கிலாந்து

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து அணி அக்சார் படேல் மற்றும் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, இறுதியில் 48.4 ஒவரில் 112 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் ஷாக் க்ராலி அரைசதம் அடித்தார், இந்திய அணியின் சார்பில் அக்சார் படேல் அதிகபட்சமாக 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்தியா முதல் இன்னிங்ஸ்
England Team - Cricket updates and Cricket news in Tamil

இந்திய அணி தொடக்கத்திலேயே சுப்மன் கில்லின் விக்கெட்டையும் புஜாராவின் விக்கெட்டையும் இழந்தாலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான கூட்டணி அமைத்து 64 ரன்கள் சேர்த்தனர்.

98-2 என்ற சிறப்பான நிலையில் இருந்த இந்தியா அணி 2 ஆம் நாள் முதல் செஸ்ஸனில் 145 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 66 ரன்கள் எடுத்திருந்தார்.

கேப்டன் ஜோ ரூட் இறுதியில் சிறப்பிக்க பந்து வீசி 5 விக்கெட்களை வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 33 ரன்கள் முன்னிலை வகித்தது.

இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸ்
Ravichandran Ashwin - Cricket updates and Cricket news in Tamil

இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து முதல் ஒவரின் முதல் பந்திலேயே அக்சார் படேலின் பந்துவீச்சில் சாக் க்ராலியின் விக்கெட்டை பறிகொடுத்தது.அதே முதல் ஒவரின் மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோ வின் விக்கெட்டையும் கைப்பற்றினர் அக்சார் படேல்.

அக்சார் படேல் மற்றும் அஸ்வினின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து இறுதியில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அக்சார் படேல் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசவேயில்லை, இரண்டாம் இன்னிங்சின் கடைசி ஓவர் தான் பந்து வீச்சு வாய்ப்பு கிடைத்தது அவர் மூன்று பந்துகள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார.

இந்தியா இரண்டாம் இன்னிங்ஸ்
Rohit Sharma - Cricket News in Tamil

48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி விக்கெட் இழப்பின்றி பத்து விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

ரோஹித் சர்மா 25 ரன்களுடனும் சுப்மன் கில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர்.

இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்ட நாயகன் அக்ஸார் படேல்
Axar Patel Cricket News in Tamil

இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்தியாவின் சார்பில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசிய அக்ஸார் படேல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்சார் படேலின் சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து

சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்களைக் கடந்தார் அஸ்வின்

ஜோ ரூட்டின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது இந்தியா

முகநூலில் பின்தொடர

India vs England 3rd Test at ahmedabad ended second day itself and India beats england by 10 wickets. Axar Patel bags the Man of the Match award.

Comment here

error: Content is protected !!