அஸ்வின் சாதனை 400 விக்கெட்கள் விரைவாக வீழ்த்திய இரண்டாவது வீரர்
டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 400 விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 393 விக்கெட்களை எடுத்திருந்தார்.
நேற்று இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்களை எடுத்ததன் மூலம் 396 விக்கெட்டுகளுடன் இருந்தார்.
அவர் இந்த போட்டியில் தனது மைல்கல் சாதனையை எட்டுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 400 விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டியுள்ளார்.

அஸ்வின் சாதனை 400 விக்கெட்கள் விரைவாக வீழ்த்திய இரண்டாவது வீரர்
டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 400 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள்
பந்து வீச்சாளர் | போட்டிகள் | போட்டி தேதி |
முத்தையா முரளிதரன் | 72 | 12 ஜனவரி 2002 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 77 | 24 பிப்ரவரி 2021 |
ரிச்சர்ட் ஹாட்லி | 80 | 2 பிப்ரவரி 1990 |
டேல் ஸ்டெய்ன் | 80 | 30 ஜூலை 2015 |
ரங்கான ஹெராத் | 84 | 28 செப்டம்பர் 2017 |
அணில் கும்ப்ளே | 85 | 6 அக்டோபர் 2004 |
க்ளென் மெக்ராத் | 87 | 19 அக்டோபர் 2002 |
சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்களைக் கடந்தார் அஸ்வின்
ஹர்பஜனின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்
Ashwin 400 Test wickets
Comment here