India vs England 3rd Test Day 1 : இந்தியா vs இங்கிலாந்து
அக்சார் படேலின் சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று. தலா 1 வெற்றிகளுடன் 1-1 என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 24 அஹமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். இரண்டு அணிகளும் 2 போட்டியிலிருந்து அணியில் சில மாற்றங்களை செய்தனர்.
இந்திய அணி ஆடும் XI வீரர்கள் :
- ரோஹித் சர்மா
- சுப்மன் கில்
- செடேஸ்வர் புஜாரா
- விராட் கோலி
- அஜிங்க்யா ரஹானே
- ரிஷப் பண்ட்
- வாஷிங்டன் சுந்தர்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- அக்சார் படேல்
- ஜஸ்பிரிட் பும்ரா
- இஷாந்த் சர்மா
இங்கிலாந்து அணி ஆடும் XI வீரர்கள் :
- சாக் க்ராலி
- டோம் சிப்லி
- ஜானி பேர்ஸ்டோ
- ஜோ ரூட்
- பென் ஸ்டோக்ஸ்
- ஒல்லி போப்
- பென் போக்ஸ்
- ஜோஃப்ரா ஆர்ச்சர்
- ஜாக் லீச்
- ஸ்டுவர்ட் ப்ராட்
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
India vs England 3rd Test Day 1 : இந்தியா vs இங்கிலாந்து
இந்தியாவின் சிறப்பான தொடக்கம்
இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்ட்ட ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பினர். தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்த் சர்மா இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் டோம் சிப்லியின் விக்கெட்டை 3 ஆவது ஒவரிலேயே வீழ்த்தினார்.
பிறகு 7ஆவது ஓவரிலேயே சுழற்பந்தை அறிமுகம் செய்தார் விராட் கோலி, தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோ, அக்சரின் சுழற்பந்தை சரியாக கணிக்காமல் LBW முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாக் க்ராலி நிலைத்து ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாக் க்ராலியுடன் நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்த ஜோ ரூட் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த வேளையில் ஜோ ரூட் தனது விக்கெட்டை அஸ்வினின் சுழலில் பறிகொடுத்தார்.
முதல் செஷன் முடியும் நேரத்தில் 25ஆவது ஒவரில் மீண்டும் அக்சார் படேல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சாக் க்ராலியின் விக்கெட்டை LBW முறையில் வீழ்த்தினார்.
முதல் செஷன் முடிவில் 27 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை பறிகொடுத்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இரண்டாவது செஸன்
India vs England 3rd Test Day 1 : இந்தியா vs இங்கிலாந்து
உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாவது செஸனைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி அக்சார் படேல் மற்றும் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இறுதியில் 48.4 ஒவரில் 112 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

India vs England 3rd Test Day 1 : இந்தியா vs இங்கிலாந்து
அக்சார் படேல் அதிக பட்சமாக 6 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணை
ரன்கள் | பந்துகள் | பௌண்டரி | சிக்ஸர் | ||
சாக் க்ராலி | LBW b அக்சார் | 53 | 84 | 10 | 0 |
டோம் சிப்லி | C ரோஹித் B இஷாந்த் | 0 | 7 | 0 | 0 |
ஜானி பேர்ஸ்டோ | LBW b அக்சார் | 0 | 9 | 0 | 0 |
ஜோ ரூட் | LBW b அஸ்வின் | 17 | 37 | 2 | 0 |
பென் ஸ்டோக்ஸ் | LBW b அக்சார் | 6 | 24 | 1 | 0 |
ஒல்லி போப் | b அஸ்வின் | 1 | 12 | 0 | 0 |
பென் போக்ஸ் | b அக்சார் | 12 | 58 | 1 | 0 |
ஜோஃப்ரா ஆர்ச்சர் | b அக்சார் | 11 | 18 | 2 | 0 |
ஜாக் லீச் | C புஜாரா b அஸ்வின் | 3 | 14 | 0 | 0 |
ஸ்டுவர்ட் பிராட் | C பும்ரா b அக்சார் | 3 | 29 | 0 | 0 |
ஜேம்ஸ் ஆண்டர்சன் | Not Out | 0 | 3 | 0 | 0 |
ஓவர் | மெய்டன் | ரன்கள் | விக்கெட் | |
இஷாந்த் ஷர்மா | 5 | 1 | 26 | 1 |
ஜஸ்பிரிட் பும்ரா | 6 | 3 | 19 | 0 |
அக்சார் படேல் | 21.4 | 6 | 38 | 6 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 16 | 6 | 26 | 3 |
இந்தியா vs இங்கிலாந்து – இணையத்தைக் கலக்கும் மீம்ஸ் தொகுப்பு
Comment here