Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

Chris MorrisIPLRR

IPL வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்.. யுவராஜ் சிங்கை முந்தினார்

IPL-Auction-Cricket-News-in-Tamil
IPL வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்.. யுவராஜ் சிங்கை முந்தினார்

இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் IPL 2021 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் மொத்தம் 292 வீரர்கள் இடம்பெற்றனர். இந்த ஏலத்தில் அணைத்து அணிகளும் மொத்தம் 57 வீரர்களை ஏலத்தில் எடுத்து 235 வீரர்கள் விற்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்க அணியின் பல்துறை ஆட்டக்காரர் (ஆல் ரவுண்டர்) கிறிஸ் மோரிஸ் IPL ஏல வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் மோரிஸ் RCB அணிக்காக விளையாடினர்.இந்த ஆண்டு ஏலத்திற்கு முன் RCB அணி கிறிஸ் மோரிசை விடுவித்தது, அவரை இந்த வருடம் கடும் போட்டியின் மத்தியில் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. சென்ற ஆண்டும் இவர் 10 கோடிக்கு வாங்கப்பட்டது இதில் குறிப்பிடத் தகுந்தது.

இன்று மோரிஸின் பெயர் வந்தவுடன் அவரை எப்படியாவது தங்கள் அணியில் எடுத்துவிட வேண்டுமென்று மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடிக்கு அவரை வாங்கியது

இது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார், வீடியோ கீழே:-

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸ் உட்பட மொத்தம் 8 வீரர்களை புதிதாக இன்று ஏலத்தில் வாங்கியுள்ளது, பட்டியல் கீழே:-

வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
கிறிஸ் மோரிஸ்75 லட்சம்16.25 கோடி
சிவம் துபே50 லட்சம்4.4 கோடி
சேட்டன் சகரியா20 லட்சம்1.2 கோடி
முஸ்தபிஸுர் ரஹ்மான்1 கோடி1 கோடி
லியாம் லிவிங்ஸ்டன்75 லட்சம்75 லட்சம்
ஆகாஷ் சிங்20 லட்சம்20 லட்சம்
KC கரியப்பா20 லட்சம்20 லட்சம்
குல்தீப் யாதவ்20 லட்சம்20 லட்சம்

Comment here

error: Content is protected !!