Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

Arjun TendulkarIPLMI

கிரிக்கெட் அவரின் ரத்தத்திலேயே உள்ளது… சச்சின் மகனை வாங்கிய சாம்பியன் அணி

Arjun-Tendulkar-Cricket-News-in-Tamil
கிரிக்கெட் அவரின் ரத்தத்திலேயே உள்ளது… சச்சின் மகனை வாங்கிய சாம்பியன் அணி

இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் IPL 2021 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் மொத்தம் 292 வீரர்கள் இடம்பெற்றனர். இந்த ஏலத்தில் அணைத்து அணிகளும் மொத்தம் 57 வீரர்களை ஏலத்தில் எடுத்து 235 வீரர்கள் விற்கப்படவில்லை.

இந்நிலையில் “கிரிக்கெட்டின் கடவுள்” என்று பலகோடி இந்திய ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு IPL போட்டிகளில் விளையாட தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இன்று கடைசியாகவே அவரின் பெயர் ஏலத்திற்கு வந்தது, மும்பை இந்தியன்ஸ் அணியாத தவிற வேறு எந்த அணியும் அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை, இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அடிப்படை விலையான 20லட்சத்திற்கு வாங்கியது.

அவரை வாங்கியதற்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி “கிரிக்கெட் அவரின் ரத்தத்திலேயே உள்ளது… ” என்று தங்களது டீவீட்டில் குறிப்பிட்டுள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய பதிவில் “என் மீது நம்பிக்கை வைத்த மும்பை இந்தியன்ஸ் குழுவிற்கும், உரிமையாளருக்கும், ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி” என்று தனது இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கர் உட்பட மொத்தம் 7 வீரர்களை புதிதாக இன்று ஏலத்தில் வாங்கியுள்ளது, பட்டியல் கீழே:-

வீரர்கள்அடிப்படை விலைவாங்கிய விலை
நாதன் கூல்டர் நைல்1.5 கோடி5 கோடி
ஆடம் மிலன்50 லட்சம்3.2 கோடி
பியூஸ் சாவ்லா50 லட்சம்2.4 கோடி
ஜேம்ஸ் நீஷம்50 லட்சம்50 லட்சம்
யுத்விர் சரக்20 லட்சம்20 லட்சம்
மேக்ரோ ஜென்சென்20 லட்சம்20 லட்சம்
அர்ஜுன் டெண்டுல்கர்20 லட்சம்20 லட்சம்

Comment here

error: Content is protected !!