Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaTest

இங்கிலாந்து Vs இந்தியா – கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

Umesh-Yadhav-Cricket-News-In-Tamil
இங்கிலாந்து Vs இந்தியா – கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற முறையில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளும் தொடரின் வெற்றியைத் தீர்மானிப்பதோடு மட்டுமல்லாமல், யார் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர் என்பதை தீர்மானிக்கும் போட்டிகளாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) அஹமதாபாத்தில் நடைபெறும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி குழு (Squad)

  1. விராட் கோலி (கேப்டன்)
  2. ரோஹித் சர்மா
  3. மயங்க் அகர்வால்
  4. சுப்மன் கில்
  5. செடேஸ்வர் புஜாரா
  6. அஜிங்க்யா ரஹானே
  7. KL ராகுல்
  8. ஹார்டிக் பாண்டியா
  9. ரிஷப் பண்ட் (WK)
  10. விரிதிமான் சாஹா (WK)
  11. ரவிச்சந்திரன் அஸ்வின்
  12. குல்தீப் யாதவ்
  13. அக்சார் பட்டேல்
  14. வாஷிங்டன் சுந்தர்
  15. இஷாந்த் சர்மா
  16. ஜஸ்பிரீத் பும்ரா
  17. முகமத் சிராஜ்

முதல் இரண்டு போட்டிகளுக்கான குழுவில் இருந்த ஷார்துல் தாக்குர் விஜய் ஹசாரே போட்டிகளில் பங்கேற்பதற்காக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் காயத்திலிருந்து குணமாகி முழு உடற்தகுதி பெறும் பட்சத்தில் அணியில் இணைவார்.

மேலும் BCCI தனது டீவீட்டில் நெட் பவுலர்கள் மற்றும் காத்திருப்பு வீரர்கள் (Standby Players) பட்டியலையும் வெளியிட்டது. இதில் நெட் பவுலர்களாக அன்கித் ராஜ்புத் , ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சவுரப் குமார் இடம்பெற்றுள்ளனர். இரண்டு காத்திருப்பு வீரர்களாக கே.எஸ். பரத் மற்றும் ராகுல் சாஹர் இடம்பெற்றுள்ளனர்.

Comment here

error: Content is protected !!