தோனியின் சாதனையை சமன் செய்தார் கோலி
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் 2 ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 317 ரன்கள் என்ற மாபெரும் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆட்டம் 4 ஆம் நாளான இன்றே முடிவடைந்தது
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கேப்டன்கள் பட்டியலில் 21 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார் மகேந்திர சிங் தோனி.
இங்கிலாந்துக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக விராட் கோலியும் 21 வெற்றிகளுடன் இந்திய அணியை இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளுக்கு வழிநடத்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் முதலிடத்தில் இணைந்திருக்கிறார் விராட் கோலி
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள்
கேப்டன் | ஆண்டுகள் | போட்டிகள் | வெற்றிகள் | தோல்விகள் | ட்ரா |
மகேந்திரசிங் தோனி | 2008-2013 | 30 | 21 | 3 | 6 |
விராட் கோலி | 2015-2021 | 28 | 21 | 2 | 5 |
அசாருதீன் | 1990-1999 | 20 | 13 | 4 | 3 |
சவுரவ் கங்குலி | 2000-2005 | 21 | 10 | 3 | 8 |
சுனில் கவாஸ்கர் | 1978-1985 | 29 | 7 | 2 | 20 |
Comment here