Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandTest

2 ஆவது போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரரை தொடரிலிருந்தே நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

India-Vs-England-Cricket-News-in-Tamil
2 ஆவது போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரரை தொடரிலிருந்தே நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இந்தியாவுக்கு எதிராக அஹமதாபாத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கும்3ஆவது டெஸ்ட் போட்டிக்கான (பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி) 17 பேர் கொண்ட பட்டியலை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இதில் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் (மொத்தம் 8 விக்கெட்கள்) வீழ்த்தியதோடு மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி அணியில் அதிகம் ஸ்கோர் செய்த (43 ரன்கள் 18 பந்துகள்)பேட்ஸ்மேன் ஆக இருந்த மொயின் அலி இடம்பெறவில்லை.

இந்நிலையில் மொயின் அலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர் இங்கிலாந்து திரும்புகிறார். முதல் போட்டியில் இடம்பெறாத ஜான்னி பார்ஸ்டோ மற்றும் மார்க் வுட் ஆகிய இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்

இங்கிலாந்து அணியின் 17 வீரர்கள் கொண்ட பட்டியல்

  1. ஜோ ரூட்
  2. ஜேம்ஸ் ஆண்டர்சன்
  3. ஜோஃப்ரா ஆர்ச்சர்
  4. ஜான்னி பார்ஸ்டோ
  5. டோம் பெஸ்
  6. ஸ்டுவர்ட் ப்ராட்
  7. ரோரி பர்ன்ஸ்
  8. சாக் கிராலி
  9. பென் போக்ஸ்
  10. டான் லாரன்ஸ்
  11. ஜாக் லீச்
  12. ஒல்லி போப்
  13. டோம் சிப்லி
  14. பென் ஸ்டோக்ஸ்
  15. ஒல்லி ஸ்டோன்
  16. கிறிஸ் ஒக்ஸ்
  17. மார்க் வுட்

Comment here

error: Content is protected !!