Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaR AshwinTest

பௌலிங் மட்டும் இல்ல…… பேட்டிங்லயும் கில்லி அஸ்வினின் அபார சதம்

Ashwin-Cricket-News-in-Tamil
பௌலிங் மட்டும் இல்ல…… பேட்டிங்லயும் கில்லி அஸ்வினின் அபார சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கியது, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் :

195 என்ற முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை நேற்று ஆட துவங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே சுப்மன் கில் விக்கெட்டை இழந்தாலும் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் 54/1 என்ற நிலையில் 249 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில்இருந்தது.

பென் போக்ஸ்-ன் அட்டகாசமான கீப்பிங் :

Ben-Foakes--Cricket-News-in-Tamil

மூன்றாம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்க்ஸை தொடர்ந்தனர் இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவும் புஜாராவும். ஆனால் பென் போக்ஸின் அருமையான விக்கெட் கீப்பிங்கால் அடுத்தடுத்து ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஸ்டம்ப்பிங் முறையில் ஆட்டமிழந்தனர். புஜாராவை ஷார்ட்லெக் பகுதியில் இருந்த ஒல்லி போப்பின் பீல்டிங் துணையுடன் பென் போக்ஸ் விரைவான முறையில் செயல்பட்டு ரன் அவுட் ஆக்கினார்.

பிறகு வந்த அஜிங்க்யா ரஹானேவும் அக்சார் படேலும் அடுத்தடுத்து மெயின் அலியின் பந்தில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

அஸ்வின் – கோலி பார்ட்னெர்ஷிப் :

Ashwin-Kohli-Cricket-News-in-Tamil

106 ரன்களுக்கு 6 விக்கெட் என்று இந்திய அணி தடுமாறிய வேளையில் தான் அஸ்வின் மற்றும் கோலி இடையே சிறப்பான கூட்டணி அமைந்தது. இவர்கள் இருவரும் 7 ஆவது விக்கெட்க்கு 96 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்திருந்தனர்.

இந்திய அணி 200 ரன்களைக் கடந்திருந்த நிலையில் அரைசதத்தைக் கடந்து 62 ரன்கள் எடுத்திருந்த போது கோலி எதிர்பாராத விதமாக மெயின் அலி பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

அவ்வளவுதான் இந்தியா இன்னும் 20 ரன்களுக்குள் அணைத்து விக்கெட்களையும் இழந்துவிடும் என்று நினைத்த நிலையில், கடைசி கட்ட வீரர்களான குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மாவும் உடனே ஆட்டமிழந்தனர் ஆனால் இந்திய அணி 237 ரன்களுக்கு 9 விக்கெட்கள் எடுத்திருந்த நிலையில் முகமத் சிராஜ் அஷ்வினுடன் கூட்டணி அமைத்தார்.

அஸ்வின் – அபார சதம் & முகமத் சிராஜ் பார்ட்னெர்ஷிப்

Ashwin-Siraj-Cricket-News-in-Tamil

ஒருபுறம் சிராஜ் நிலைத்து நின்று தடுப்பாட்டம் ஆட அஸ்வின் தன்னுடைய அபாரமான சதத்தை பூர்த்தி செய்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பேட்ஸ்மேனாக கிரிக்கெட் வாழ்வை தொடங்கினாலும் சர்வதேச போட்டிகளில் பௌலிங் ஆல்ரவுண்டர் ஆகி மட்டுமே பங்காற்றினார்.

ஆனால், இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடிய ஒவ்வொரு ஷாட்டும் தேர்ந்த பேட்ஸ்மேன் போன்று நுட்பமாக இருந்தது. அஸ்வின் ஆட்டத்தை இணைந்து விளையாடிய போதும் சரி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பிறகும் கேப்டன் கோலி வெகுவாக ரசித்துப் பாராட்டினார்.

அஷ்வினின் சதத்தை, அஷ்வினைவிட சிராஜ் மகிழ்ச்சியாக கொண்டாடினார். இது இந்திய அணியில் உள்ள நட்பையும் முகமத் சிராஜின் நற்பண்பையும் குறிக்கிறது. முகமத் சிராஜின் இந்த பண்பு சமூக வலைத்தளங்களில் அனைவராலும் வெகுவாக பாரட்டப்படுகிறது.

Mohammed-Siraj-Cricket-News-in-Tamil

இந்த பிட்ச் சர்வதேச தரத்தில் இல்லை, இது டெஸ்ட் மேட்ச் ஸ்டாண்டர்டில் இல்லை என்று சொன்னவர்கள் முகத்தில் கரியைப் பூசும் விதமாக 134 பந்துகளை மட்டுமே சந்தித்து 103 ரன்களை அடித்தார் இதில் 14 பௌண்டரிகள் மற்றும் 1சிக்ஸரும் அடங்கும்.அதுவும் சதமடித்த அந்த ஒவேரில் மட்டும் 17 ரன்களை எடுத்து இந்திய அணி.

481 ரன்கள் முன்னிலை – இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு

இறுதியாக அஸ்வின் 106 ரன்கள் எடுத்திருந்த போது ஒல்லிஸ்டோன் பந்தில் போல்ட் ஆனார். இந்தியா 286 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 481 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இங்கிலாந்துக்கு வெற்றிபெற 482 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரரான டோம் சிப்லியின் விக்கெட்டை அக்சார் படேலின் பந்தில் இழந்தது

பிறகு சிறிது நிலைத்து விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆட்டநேரம் முடியும் வரை மேலும் விக்கெட்கள் எடுக்காமல் இருக்க இங்கிலாந்து அணி கடைசிகட்ட வீரரான ஜாக் லீச்சை நைட் வாட்ச்மேனாக அனுப்பியது அவரது விக்கெட்டை அபார பீல்டு செட்டிங் மூலம் அக்சார் படேல் வீழ்த்தினார்

3 ஆம் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணை:

ரன்கள்பந்துகள்பௌண்டரிசிக்ஸர்
ரோஹித் சர்மாOut267021
சுப்மன் கில்Out142801
சேடேஸ்வர் புஜாராOut72310
விராட் கோலிOut6214970
ரிஷப் பண்ட்Out81110
அஜிங்க்யா ரஹானேOut101420
அக்சார் படேல்Out71810
ரவிச்சந்திரன் அஸ்வின்Out106148141
குல்தீப் யாதவ்Out3900
இஷாந்த் சர்மாOut72410
முகமத் சிராஜ்Not Out162102
ஓவர்மெய்டன்ரன்கள்விக்கெட்
ஒல்லி ஸ்டோன்6.51211
ஜாக் லீச்3361004
மொயின் அலி327984
ஜோ ரூட்40150
ஸ்டுவர்ட் பிராட்93250
டேன் லாரன்ஸ்1070

Comment here

error: Content is protected !!