Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

EnglandIndiaTest

இந்தியா 249 ரன்கள் முன்னிலை : இன்று மட்டும் 15 விக்கெட்கள் வீழ்ந்தது

Rohit-Sharma-Cricket-News-in-Tamil-Vilaiyaattu.com
இந்தியா 249 ரன்கள் முன்னிலை : இன்று மட்டும் 15 விக்கெட்கள் வீழ்ந்தது

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கியது, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்கள் குவித்தது.

Rishab-Pant-Cricket-News-in-Tamil

அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 161 ரன்களும் , ரஹானே 67ரன்களும் மற்றும் ரிஷப் பண்ட் 58 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து அணி சார்பாக மொயின் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்

இங்கிலாந்து அணி முதல் செஷன்:

இதற்கடுத்து களமிறங்கிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸ் முதல் ஓவரிலேயே இஷாந்த் ஷர்மாவின் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

பிறகு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 8 ஆவது ஓவரில் மாற்றொரு தொடக்க வீரரான டோம் சிப்லி யின் விக்கெட்டை வீழ்த்தினார்

தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அறிமுக வீரர் அக்சார் படேல் பந்தில் ஸ்வீப் அடிக்க முயன்று Square Leg திசையில் இருந்த அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

Axar Patel celebrating after Joe Root's wicket
Axar Patel celebrating after Joe Root’s wicket

இங்கிலாந்து வீரர் டான் லாரன்ஸ் முதல் செஷனின் இறுதி பந்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்தில் Short Leg பகுதியில் இருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இறுதியாக உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது

இங்கிலாந்து அணி இரண்டாம் செஷன்:

உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டத்தின் 2 ஆவது செஷன் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஒல்லி போப் களத்தில் 2 ஆவது செஷன் பேட்டிங்கை தொடங்கினர்.

உணவு இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் அக்சார் படேல் பந்தில் தடுமாறியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபார சுழற்பந்தால் கிளீன் போல்ட் ஆக்கினார்

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்க்கு பிறகு சுதாரித்து ஆடிய ஒல்லி போப் & பென் போக்ஸ் இணை 35 ரன்கள் பார்ட்னெர்ஷிப் எடுத்திருந்த நிலையில் ஒல்லி போப் முகமது சிராஜ் பந்தில் ரிஷாப் பண்ட் பிடித்த அட்டகாசமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ச்சியான விக்கெட்களால் தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானே பிடித்த அற்புதமான கேட்சினால் அக்சார் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார்

அதன் பிறகு ஆடவந்த ஒல்லி ஸ்டோன் வந்த வேகத்திலேயே 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது செஷனில் இங்கிலாந்து 31.2 ஓவர்கலில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது

தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 49.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி மூன்றாவது செஷன்:

தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 49.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிறகு இங்கிலாந்து அணி கடைசி இரண்டு விக்கெட்களையும் 3 ஆவது செஷன் இல் 28 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதியில் 59.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வினின் 29ஆவது 5-விக்கெட்

Ashwin-Cricket-News-in-Tamil

ரவிச்சந்திரன் அதிகபட்சமாக 5 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா மற்றும் அக்சார் படேல் தலா 2 விக்கெட்களையும் முகமத் சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இது ரவிச்சந்திரன் அஸ்வினின் 29ஆவது 5-விக்கெட் ஹால் ஆகும்.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் :

195 என்ற முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆட துவங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே சுப்மன் கில் விக்கெட்டை இழந்தாலும் 54/1 என்ற நிலையில் 249 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது. மேலும் இன்று மட்டுமே 15 விக்கெட்கள் வீழந்தது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அட்டவணையை பார்க்க இந்த லிங்கில் கிளிக் செய்து படிக்கவும்

Comment here

error: Content is protected !!