சுனில் கவாஸ்கர் – Sunil Gavaskar
“எனக்கு வருத்தம் பா! இந்த வீரரை போய் தூக்கிட்டீங்க” – சுனில் கவாஸ்கர் விளாசல்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி 3 மாற்றங்களை செய்தது. குறிப்பாக ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வளிக்கும் விதமாக அவருக்கு பதிலாக முகமத் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி இங்கிலாந்துடன் அஹமதாபாத்தில் நடைபெறுகிறது.
வழக்கமான டெஸ்ட் போட்டிகளை விட பிங்க் பால் டெஸ்ட் என்கிற பகலிரவுப் போட்டிகள் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும்.
3ஆவது டெஸ்டில் பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவினால் எனக்கு வருத்தம் என்று தனது எதிர்கருத்தினை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் கூறியதாவது
“நீங்கள் உங்கள் அணியின் நம்பர்1 பௌலரை பணிச்சுமையைக் குறைக்கும் பொருட்டு ஓய்வளிக்க கூடாது.”
“ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் எப்படி நம்பர்1 பௌலரோ அதேபோல புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடிய நம்பர் 1 இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா.”
“முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் முக்கியமாக வென்றே தீரவேண்டிய போட்டியில் உங்கள் அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வளிப்பது என்பது கூடாது. இது எனக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது”
Comment here