Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

IndiaTest

விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ரோஹித் சர்மாவின் அதிரடியால் இது இந்தியாவின் நாள்

Rohit-Sharma-Cricket-News-in-Tamil
டாஸ் & முதல் செஷன்

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 13 சென்னையில் தொடங்கியது, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார் கேப்டன் விராட் கோலி.

இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 ஆவது ஓவரில் தொடக்க வீரர் சுப்மன் கில் விக்கெட்டை இழந்தது. பிறகு இந்தியா அணியின் சுவர் என்று கருதப்படும் சேடேஸ்வர் புஜாராவும் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். பின்னர் புஜாராவும் ஆட்டமிழக்க பின்னர் வந்த இந்திய கேப்டனை கோலியும் எதிர்பாராதவிதமா உடனே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ரஹானே மற்றும் ரோஹித் பார்ட்னர்சிப்

பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் ரோஹித் இணை 4 ஆம் விக்கெட் பார்ட்னெர்ஷிப் ஆக 162 ரன்கள் குவித்த நிலையில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.

பிறகு நிதானமாக ஆடி அரைசதம் அடித்த அஜிங்க்யா ரஹானேவும் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்தியாவின் நாள்

ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதம் மற்றும் ரஹானேவின் நிதானமான அரைசதத்தாலும் இது இந்தியாவின் நாளாக அமைந்தது.

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 300/6 (88 ஓவர்கள்)
ரன்கள்பந்துகள்பௌண்டரிசிக்ஸர்
ரோஹித் சர்மாOut161231182
சுப்மன் கில்Out0300
சேடேஸ்வர் புஜாராOut215820
விராட் கோலிOut0500
அஜிங்க்யா ரஹானேOut6714990
ரிஷப் பண்ட்Not Out335651
ரவிச்சந்திரன் அஸ்வின்Out131910
அக்சார் படேல்Not Out5710
ஓவர்மெய்டன்ரன்கள்விக்கெட்
ஸ்டுவர்ட் பிராட்112370
ஒல்லி ஸ்டோன்155421
ஜாக் லீச்262782
பென் ஸ்டோக்ஸ்20160
மொயின் அலி2631122
ஜோ ரூட்82151

Comment here

error: Content is protected !!