Vlaiyaattu.com

Sports and Cricket News in Tamil

Brendon McCullumMohammad RizwanPakistanRecords

முதலில் பிரண்டன் மெக்கல்லம் இப்போது முகமத் ரிஸ்வான். இவர்கள் இருவர் மட்டுமே அந்த சாதனைக்கு உரியவர்கள்

பாகிஸ்தான் VS தென்னாப்பிரிக்கா

தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முறையில் தோல்வியடைந்த நிலையில், இன்று இந்த அணிகளுக்கிடைலயிலான 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரின் முதல் போட்டி இன்று பிப்ரவரி 11 லாஹூரில் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸ்

இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169/6 என்ற ஸ்கோரை எட்டியது. பாகிஸ்தான் ஆனியன் சார்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமத் ரிஸ்வான் 64 பந்துகளில் 104 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்

பிறகு, இரண்டாவதாக பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி நிணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 166 ரங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆட்டநாயகன்

சிறப்பான முறையில் சதமடித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முகமத் ரிஸ்வான் ஆட்ட நாயனாக தெரிவு செய்யப்பட்டார்.

சாதனை (Record)

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அணைத்து வகையான போட்டிகளிலும் (ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, T20I போட்டி) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகசதமடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணிவீரரான பிரண்டன் மெக்கல்லம் க்கு பிறகு இரண்டாவதாக முகமத் ரிஸ்வான் இணைந்திருக்கிறார்

சர்வதேச T20 போட்டிகளில் பாகிஸ்தானுக்காக சதமடித்த இரண்டாவது வீரர்

இந்த சத்தத்தின் மூலம் முகமத் ரிஸ்வான் – சர்வதேச T20 போட்டிகளில் பாகிஸ்தானுக்காக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது வீரராக இணைந்து உள்ளார். இதுவரை பாகிஸ்தானுக்காக T20I போட்டிகளில் சதமடித்த ஒரே வீரராக முதலிடத்தில் அஹமத் ஷேஷாட் மட்டுமே இருந்தார். அவர் 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக 111 ரன்கள் அடித்தார்.

Comment here

error: Content is protected !!